சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளம்,உடல்நலம் மற்றும் முதலாளிகள் தொடர்பான ஆய்வு நடைபெறுகிறது- ஊழியராக நீங்களும் பங்கு பெறலாம் !

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கை தரம் , முதலாளிகள் மற்றும் ஊழியர்களின் உடல்நலம் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்காக ஆய்வு ஒன்று இணையம்வழி நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பான Its Raining Rain Coats என்ற அமைப்பு இந்த ஆய்வை நடத்தி வருகிறது.

இந்த ஆய்வில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம் சரியான முறையில் வழங்கப்படுகிறதா. அவர்களுக்கு சம்பளம் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறதா உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் போது யாரை தொடர்பு கொள்கிறார்கள் சரியான முறையில் அவர்களுக்கான பங்களிப்பு வழங்கப்படுகிறதா என்றும் மேலும் பல கேள்விகள் அந்த ஆய்வில் கேட்கப்படுகின்றன.

இந்த ஆய்வில் வெளிநாட்டு ஊழியராக நீங்கள் பங்கு கொண்டு உங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம். மேலும் அந்த ஆய்வில் பங்கு பெறுபவரின் தகவல்கள் அனைத்தும் வெளியிடப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் பங்கு பெற கிளிக் செய்யவும்