ஜூரோங் பறவைகள் பூங்காவிற்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டு ஊழியர்கள் -Jurong Bird Park Trip

சிங்கப்பூரில் தற்போது வெளிநாட்டு ஊழியர்கள் நோய் பரவல் கட்டுப்பாடுகளால் விடுதிகளில் முடங்கி உள்ளனர். அவர்களின் மனச்சோர்வை போக்கும் வகையில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன .

சிங்கப்பூரில் மருத்துவ சேவைகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான மனச்சோர்வை போக்கும் சேவைகளை வழங்கி வரும் ஹெல்த் சர்வ் என்ற தன்னார்வ அமைப்பு வெளிநாட்டு ஊழியர் சிலரை ஜூரோங் பறவைகள் பூங்காவிற்கு சுற்றுலா அழைத்துச் சென்றது .

வெளிநாட்டு ஊழியர்களில் சிலர் முதன் முறையாக அந்த பூங்காவிற்கு செல்வதாகவும் இது அவர்களுக்கு புத்துணர்வை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

இந்த சுற்றுலாவினை Singapore Wildlife Reserve ஏற்பாடு செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Want To Know Daily Gold Price Click The Image