வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தரமற்ற உணவு விநியோகம் -MOM ஆய்வு

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வழங்கப்பட்ட உணவு தரமற்று இருந்ததாகவும் மேலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது இதனைத்தொடர்ந்து சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் அந்த தங்கும் விடுதியில் ஆய்வுகளை மேற்கொண்டது.

மேலும் தற்போது விடுதிகளில் சுகாதாரமான சூழ்நிலையை கடைப்பிடிப்பது வெளிநாட்டு ஊழியர்களின் கலாச்சாரங்களுக்கு ஏற்றவாறு உணவுகளை வழங்குவது போன்ற நடைமுறைகளை கடைபிடிக்க தற்போது அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை பற்றி அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் அது பற்றி கவனம் செலுத்தப்படும் என செம்ப்கார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது .

Want To Know Daily Gold Price Click The Image