வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் விதிமீறல்-MOM சோதனை .

சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கான விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் என அழைக்கப்படுகிறது.

தற்போது நோய்த்தொற்று பரவி வருவதால் வெளிநாட்டு ஊழியர்கள் வெளியில் செல்வதற்கு மேலும் அந்த விடுதிகளில் தங்கி இருக்கும் நேரங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சிங்கப்பூரின் ஜுரோங் பகுதியில் இருக்கக்கூடிய வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் கொரோனா நோய்த்தொற்று விதிகள் மீறப்பட்டுள்ளதாக அங்கு மனிதவள அமைச்சகம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை சிகிச்சைக்கு அனுப்புவதில் தாமதம், மேலும் போதுமான மருத்துவ உதவிகள் வழங்கப்படாதது,சரியான முறையில் மற்றும் தரம் குன்றிய உணவுகளை வழங்கியது ஆகிய குறைகளின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுவதாக சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது .

Click the image to buy