சிங்கப்பூரில் லாரி விபத்து -Lorry Accident In Singapore

சாலை விபத்து @ ஜலான் அகமது இப்ராகிம் மற்றும் பெனோய் சாலை சந்திப்பில்.

(11 அக்டோபர்) மதியம் 12.20 மணியளவில், மேற்கூறிய முகவரியில் சாலை விபத்துக்கான உதவிக்கான அழைப்பை SCDF பெற்றது.

டிரெய்லர் லாரி மற்றும் லாரி உட்பட ஐந்து வாகனங்கள் விபத்துக்குள்ளானது.

டிராபிக் லைட்டில் மோதிய வாகனத்திலிருந்து அதன் ஓட்டுநர் மீட்கப்பட்டார் .கார் நொறுங்கி இருந்த நிலையில் ஓட்டுனருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத அளவுக்கு SCDF வீரர்கள் அவர்களை மீட்டனர்

தீயணைப்பு வீரர்கள் ஹைட்ராலிக் மீட்பு கருவிகளைப் பயன்படுத்தி சிக்கியவரை வெளியேற்றினார்கள்.

அந்த நபரும், ஒரே காரில் இருந்த இரண்டு பயணிகளும், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Click Here To Order Now