சிங்கப்பூர்-இந்தியாவிற்கான எல்லை கட்டுப்பாடுகளில் எப்போது தளர்வு ?

நோய்த்தொற்று பரவல் காரணமாக சர்வதேச நாடுகள் எல்லை கட்டுப்பாடுகளில் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்தநிலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இந்தியாவிற்குள் ஏற்பதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது சிங்கப்பூர் இந்தியாவிற்கான பயணக் கட்டுப்பாடுகள் நீடித்து வருகின்றன. இருப்பினும் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கான அனுமதி இருந்தாலும் சிங்கப்பூருக்கு நுழைவதற்கான கட்டுப்பாடுகள் இன்னும் நீடித்துக் கொண்டே தான் இருக்கின்றன .

சிறப்பு பயண ஏற்பாடு திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு சில நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்த வண்ணமாகவே உள்ளன.

சிங்கப்பூரில் அதிகரித்துவரும் நோய்த்தொற்று ஒரு காரணமாக கருதப்படுகிறது. மேலும் அக்டோபர் மாதத்திற்கான விமான டிக்கெட்டுகள் தற்போது இல்லை என்பதும் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது .

சிங்கப்பூர் செல்வதற்கு முறையான அனுமதி கிடைத்துகம் மேலும் வேலை அனுமதி கடிதம் கையில் இருந்தும் சிங்கப்பூர் செல்ல முடியாத சூழ்நிலையை பல வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்குகின்றனர். இதற்கு விமானம் அதிக அளவில் இயக்கப்படாததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது .

முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் சிறப்பு பயண ஏற்பாடு திட்டத்தின்கீழ் சிங்கப்பூரில் நுழைவதற்கு பல்வேறு நாடுகளுக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது.

எல்லை கட்டுப்பாடுகளில் சிங்கப்பூர் தளர்வு அளித்திருந்தாலும் தற்போது நோய் பரவல் அதிகரித்து வருவதாலும் கட்டுப்பாடுகள் சற்று கடினமாக இருப்பதாக இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகள் தெரிவிக்கின்றனர். மேலும் முழுமையான தளர்வுகளை எதிர்பார்த்து வெளிநாட்டு ஊழியர்கள் பலர் இந்தியாவில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Click The Image To BUY