சிங்கப்பூரில் நடிகர் சூர்யா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் படப்பிடிப்பு.

சிங்கப்பூரில் நடிகர் சூர்யா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் படப்பிடிப்பு நடைபெற்றது.

நடிகர் சூர்யா மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த திரைப்படம் ஆதவன் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற “மாசி மாசி” என்ற பாடலின் படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பு சிங்கப்பூரின் பிரபல தொலைக்காட்சியான வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெறவிருக்கும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்காக நடைபெற்ற ஒளிப்பதிவாகும்.

இந்தப் பாடல் படப்பிடிப்பில் சிறப்பான மற்றும் புதிய வகையான ஆடைகள் வடிவமைக்கப்பட்டு அதற்கான படப்பிடிப்பு நடைபெற்று சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் இந்த படப்பிடிப்பில் பங்கேற்றனர்.

சிங்கப்பூரின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் இந்த பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது

இந்தப் பாடலுக்கான நடன உடை அமைப்பானது ஆதவன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் “மாசி மாசி” திரைப்பட பாடலில் இடம்பெற்ற ஆடை வடிவமைப்பை போன்று இருக்கும். மேலும் நடன அசைவுகளை சிறப்பான முறையில் வடிவமைத்து இருப்பதாக இந்த நடன குழு மற்றும் இந்த பாடலுக்கான நடன ஆசிரியர் (Choreographer).திரு.ரமேஷ்வரா மேலும் தெரிவித்தார்.

Want To Know Daily Gold Price Click The Image