48 மணிநேரத்தில் விமான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டு சிங்கப்பூரிலிருந்து திருச்சி சென்ற நோயாளி -கனவை நிறைவேற்றிய சிங்கப்பூர் !

2019 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராஜேஸ்வரி இந்தியாவில் இருக்கும் தனது குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் அந்த கனவை நிறைவேற்றி உள்ளது சிங்கப்பூர் Tang Tock Seng  மருத்துவமனை.

  ராஜேஸ்வரி கடந்த 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு தனது குழந்தைகளை பார்க்க செல்ல திட்டமிட்டிருந்தார். எல்லை கட்டுப்பாடுகள் மற்றும் இந்தியாவில் நோய்தொற்று அதிகரித்துள்ள நிலை காரணமாக விமான சேவை ஏதும் இல்லாததால் அவரது பயணம் தடைபட்டது  .

மேலும் ராஜேஸ்வரி அவர்கள் புற்று நோயால் அதிக அளவில் பாதிக்கப்பட்டார் .எந்த நேரத்திலும் அவர் உயிர் பிரிந்து விடக்கூடும் என்று மருத்துவர்கள் அஞ்சினர்.

மேலும் ராஜேஸ்வரி அவர்களின் உடல்நிலை விமான பயணத்திற்கு ஏற்றதாக இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற முன் வந்தது சிங்கப்பூர் மருத்துவமனை மற்றும் சிங்கப்பூர் விமான துறை.

ராஜேஸ்வரியின் கடைசி ஆசை என்பது இந்தியாவில் இருக்கக்கூடிய தனது குழந்தைகளை பார்க்க வேண்டும் என்பதே .

ஏர் இந்தியா விமானம் மூலம் அவர் 48 மணி நேரத்தில் பயணம் மேற்கொள்வதற்கான பணிகள் துவங்கப்பட்டு அவர் செல்வதற்கான அனுமதியும் கிடைத்தது. மேலும் மூன்று நபர்கள் தங்களின் விமான இருக்கைகள் , பயணச்சீட்டை விட்டுக் கொடுத்ததால் அவர் இந்தியா செல்வதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

பல்வேறு தடைகளையும் தாண்டி இந்தியாவில் இருக்கும் தனது குழந்தைகளை சந்தித்து மகிழ்ச்சியில் திளைத்தார் ராஜேஸ்வரி .

2020 ஆம் ஆண்டு 44 வயதான ராஜேஸ்வரி அவர்கள் ஜூன்27 ஆம் தேதி உயிரிழந்தார். அவர் சிங்கப்பூர் நிரந்தர வாசி ஆவார்.

மேலும் தனது மனைவிக்கு சிகிச்சை அளித்தவர்கள் அவர் இந்தியா செல்வதற்கு விமான பயண ஏற்பாடுகளை செய்த அனைவருக்கும் அவரது கணவர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார் .

Want To Know Daily Gold Price Clic The Image https://api.whatsapp.com/send/?phone=%2B6598512245&text=I+am+interested+in+getting+daily+gold+price.+Can+you+please+add+me+in%3F&app_absent=0