சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் தொடர்ந்து உச்சத்தை நெருங்கி வரும் நோய்த்தொற்று.

சிங்கப்பூரில் சமூக அளவில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளிளும் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் அக்டோபர் 9ஆம் தேதி நிலவரப்படி வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் 832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

நோய் தொற்று அதிகம் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளை சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கண்காணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Click the Image To BUY