சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு தாங்கள் வாங்கிய பொருட்களை பார்சல்(Cargo) அனுப்பும் வெளிநாட்டு ஊழியர்கள் பாதிப்பு.

சிங்கப்பூரில் குறிப்பாக தமிழர்கள் அதிகம் பணிபுரிந்து வருகின்றனர் அப்படி அவர்கள் பணி புரியும் போது அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி தங்களின் உறவுகளுக்கு நண்பர்கள் மூலம் ஊருக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

தற்போது கொரோனா எல்லை கட்டுப்பாடு நிலவி வருவதால் அதிக அளவில் ஊழியர்கள் இந்தியாவிற்குச் செல்ல முடியவில்லை. இதனால் தங்கள் குழந்தைகள் மற்றும் தங்கை அம்மா அப்பா போன்ற உறவுகளுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி பார்சல் சேவை எனப்படும் கார்கோ மூலம் அனுப்பி வைக்கின்றனர் .

பார்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும் பொருட்கள் காலம் கடந்து அதாவது இரண்டு மூன்று மாதங்கள் கழித்தும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அது செல்வதில்லை. அப்படி சென்றாலும் அவை உடைந்த நிலையில் செல்கின்றனர் .

இதுபற்றி கார்கோ நிறுவனங்கள் தரப்பில் சொல்லப்படுவது என்னவென்றால். அனுப்பப்படும் பொருட்கள் சிங்கப்பூரில் இருந்து அனுப்பப்படும் போது மிகச் சிறப்பான முறையில் அனுப்பப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் காலம் கடந்து அவர்களின் கைகளில் கிடைப்பதற்கு Customs எனப்படும் சுங்க துறை அனுமதி உடனே கிடைக்காததே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பார்சல்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கும்போது சுங்கத் துறை சம்பந்தமான தெளிவான விளக்கங்களை கார்கோ நிறுவனங்கள் வழங்குவதில்லை என வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர் .

தற்போது சர்வதேச நாடுகளின் எல்லை கட்டுப்பாடுகளால் இந்தியாவிற்கு செல்லும் சரக்கு விமானங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து உள்ளதால் காலதாமதம் ஏற்படுவதாக கார்கோ நிறுவனங்கள் மேலும் தெரிவிக்கின்றன .

Click The Image To BUY