சிங்கப்பூரில் 3,703 பேருக்கு Covid-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னாள் நோய்த்தொற்று எண்ணிக்கை சற்றே சரிந்து இருந்தது. ஆனால் அக்டோபர் 9ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் 3,703 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட் 1,569 பேர் தற்ப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் .

2,868 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

832 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூன்று பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Want To Know Daily Gold Price Click The Imagehttps://api.whatsapp.com/send/?phone=%2B6598512245&text=I+am+interested+in+getting+daily+gold+price.+Can+you+please+add+me+in%3F&app_absent=0