சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் செல்போன் மற்றும் செயலிகளுக்கு அடிமையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

சிங்கப்பூர் பல்வேறு நாடுகளிலிருந்து ஊழியர்கள் சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றனர் கப்பல் துறை கட்டுமான துறை சேவைத் துறை தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர் .

கடந்த ஆண்டு நோய்த்தொற்று பரவல் ஆரம்பக்கட்டத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் இருந்து வெளியில் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது சில விடுதிகளில் உள்ளவர்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது .

விடுதிகளில் முடங்கிக்கிடக்கும் ஊழியர்களுக்கு பல்வேறு விளையாட்டுகள் இருந்தன ஆனால் தற்போது ஒன்றுகூடல்கள் என்பது அரிதாகி விட்டது. இதனால் இணையம் மூலம் செல்போன்களுக்கும் அதிலுள்ள செயலிகளுக்கும் அடிமையாகி வருகின்றனர் குறிப்பாக Tik Tok,Youtube, Instagram போன்ற செயலிகளில் தொடர்ந்து வீடியோக்களை பார்க்கின்றனர் இதனால் அவர்களுக்கு வேலையில் நாட்டமின்மை ஏற்படுகிறது .என Health Serve ஆலோசகர் துர்கா அறிவான் தெரிவித்திருக்கிறார். மேலும் தற்போது ஊழியர்கள் நவீன கால இணையத்திற்கு அடிமையாகி வருவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார் .

TikTok,Youtube போன்ற செயலிகளை பயன்படுத்தி வெளிநாட்டு ஊழியர்கள் பலர் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சிங்கப்பூர் அளவில் பிரபலமாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.