5,0000 ரூபாய் மதிப்புள்ள பொருளை தமிழ்நாட்டிற்கு சிங்கப்பூரிலிருந்து கார் கோவில் அனுப்பியவருக்கு அதிர்ச்சி- உடைந்த நிலையில் டெலிவரி !

சிங்கப்பூரில் பணிபுரிபவரும் சமூக ஆர்வலருமான திரு.துரைகோபி தனது முகநூல் பதிவில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் .

அந்த பதிவின் தகவல் பின்வருமாறு.

இந்திய ரூபாய் மதிப்புக்கு ஐம்பதாயிரம் மதிப்புள்ள பேட்டரியால் இயங்க கூடிய E ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியதாகவும்….
சிங்கப்பூர் ல் இருக்கும் கார்கோவில் இந்திய பண மதிப்பில் பதினைந்தாயிரம் ரூபாய் செலுத்தி 30/07/2021 அன்றைய தேதியில் இந்தியாவுக்கு அனுப்பி வைத்துவிட்டு அவர் தாயகம் சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார் மேலும் அவர் முகநூல் பதிவில் கூறியது பின்வருமாறு .

இரண்டு மாதத்துக்கு பிறகு அந்த அந்த E ஸ்கூட்டரை இன்றுதான் வீட்டில் டெலிவரி செய்திருக்கிறார்கள்.

அதுவும் எப்படி எனில்…
ஒட்டுமொத்தமாக அதை நொறுக்கி நாசம் செய்து டெலிவரி செய்திருக்கிறார்கள்.

டெலிவரி செய்ய வந்தவர்களை கேட்டால் நாங்கள் அந்த நிறுவனத்தின் நேரடி ஊழியர்கள் கிடையாது. எங்களிடம் அவர்கள் இப்படித்தான் ஒப்படைத்தார்கள். நீங்கள் அவர்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்றிருக்கிறார்கள்.

வெளியே சென்றிருந்த நான் வீட்டுக்கு வந்ததும் அந்த E ஸ்கூட்டரை செக் செய்துவிட்டு… சிங்கப்பூரில் இருக்கும் கார்கோ நிறுவனத்துக்கு தொடர்ந்து அழைக்கிறேன். அழைப்பை ஏற்க மறுக்கிறார்கள்.

ஆகவே சிங்கப்பூரில் ஒவ்வொரு வெள்ளியையும் ரத்தத்தைசிந்தி சம்பாதிக்கும் என் அருமை உறவுகளே.. அஞ்சு பத்து பணத்தை சேர்த்து ஊருக்கு பொருட்களை வாங்கி ஆசை ஆசையாய் அனுப்புவதற்கு முன்… சம்மந்தப்பட்ட கார்கோ நிறுவனங்களைப்பற்றி விசாரித்து விட்டு உங்கள் பொருட்களை அனுப்புங்கள்.

நன்றி வணக்கம்…!!” என தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்திருக்கிறார்.