தூக்கமில்லாமல் உழைக்கும் ஊழியர்கள் -ஏமாற்றும் ஏஜென்சிகள்.

சர்வதேச அளவில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமாகவே உள்ளது.

குறிப்பாக மலேசியா, கனடா, லண்டன், சிங்கப்பூர் ,மற்றும் பல நாடுகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களாக செல்ல விரும்பும் தொழிலாளர்கள் .அதிக அளவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் ஏஜென்சிகள் மூலமாகவே செல்கின்றனர். இந்த ஏஜென்சிகளில் பல ஏஜென்சிகள் மத்திய அரசின் அங்கீகாரம் மற்றும் பதிவு பெறாத ஏஜென்சிகளாகவே உள்ளன .

இப்படி ஏஜென்சிகளிடம் அதிக அளவில் குறிப்பாக சில நாடுகளுக்கு 5 லட்சம் முதல் 15 லட்சம் வரை ஏஜென்சிகளிடம் செலுத்தியே வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதில் பல ஏஜென்சிகள் தொழிலாளர்களை ஏமாற்றியும் விடுகின்றன.

சில ஏஜென்சிகள் பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்கு வேலைகளுக்காக ஊழியர்களை அனுப்பும்போது சொல்லப்பட்ட வேலையை விட அதிக வேலை பளு உள்ள பணியில் சேர்த்து விடுகின்றனர். மேலும் ஏஜென்சிகள் முன்பு சொன்ன ஊதியத்தை விட மிகக் குறைவான ஊதியத்தை அந்த நிறுவனங்கள் வழங்குகின்றன.

பல்வேறு நாடுகளில் நியாயமாக தொழிலாளர்களை நடத்தும் நிறுவனங்களும் குறிப்பிட்ட அதே தொகை குறிப்பிட்ட அதே நேரத்தில் வேலை வாங்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது .

மேலும் கடன் பட்டு வெளிநாடுகளுக்கு செல்லும்போது ஏஜென்சிகளிடம் வழங்கிய தொகையை திரும்பப் சம்பாதிப்பதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இருப்பினும் வெளிநாடுகளுக்குச் சென்ற பிறகு ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன.

வெளிநாடுகளில் சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு அந்த நாட்டு அரசு அறிவித்த குறிப்பிட்ட தொகையை சம்பளமாக வழங்குவதில்லை. அதற்கு பதிலாக மிக சொற்பமான சம்பளத்தை மட்டுமே வழங்குகின்றன. ஆனால் அரசு அறிவித்த சம்பளத்தை பெற்றுக் கொண்டது போல ஆவணங்களில் அவர்களிடம் கையெழுத்தையும் பெற்றுக் கொள்கின்றன என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர் .