சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் அனைத்தும் உயர்ந்த மேம்பாட்டு தரத்துடன் இருக்க வேண்டும்.

சிங்கப்பூரில் பொதுவாக ஊழியர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கின்றனர். தற்போது நோய்த்தொற்று பரவல் அதிகரித்து காணப்படுவதால் அங்கு இருக்கக்கூடிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு தனி கவனம் செலுத்தப்படுகிறது.

தற்போது சிங்கப்பூரில் உள்ள அனைத்து புதிய வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளும் உயர்ந்த மேம்பாட்டு தரத்துடன் இருக்க வேண்டும் என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Az Telecommunications #192 Serangoon Road Sundy Mega Offer

ஊழியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையிலும் நோய்த்தொற்று காலங்களில் பரவல்களை கட்டுப் படுத்தும் வகையிலும் அதற்கான தயார் நிலையில் இருப்பதற்கு இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

புதிய விடுதிகளில் நோய்தொற்று காலங்களில் தனிமைப்படுத்த வகையில் தனிமைப்படுத்தும் படுக்கைககள் பத்து இருக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது .

மேலும் கிருமித்தொற்று சூழல்களில் 15 தனிமைப்படுத்தல் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விடுதிகளில் ஆயிரம் படுக்கைகள் இருக்க வேண்டும்

அறைகள் மற்றும் கழிப்பறைகளில் காற்றோட்டம் வாய்ந்த பகுதிகளாக மேம்படுத்தப்படும் என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆறு நபர்களுக்கும் அறையுடன் கூடிய குளியலறை மற்றும் கழிப்பறைகள் இருக்க வேண்டும்.

தங்கும் விடுதிகளில் ஒவ்வொரு பிரிவுகளிலும் 120 பேர் மட்டுமே இருக்க வேண்டும்.

மேலும் சமையல் செய்வது சாப்பிடுவது சலைவை செய்வது போன்ற தேவைகளுக்கு தனிப் பிரிவுகள் அமைக்க வேண்டும்.

தங்கும் விடுதிகளில் தங்கி இருக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் தங்குமிட வசதி 4.2 சதுர மீட்டர் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

அறைகளில் போதுமான அளவு மின்விசிறிகள் மற்றும் வைபை வசதி இருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓர் அரங்கில் அதிகபட்சம் 12 பேர் மட்டுமே அனுமதி.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் மேம்பட்ட தரங்களை நிறைவு செய்ய வேண்டும் என மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது .