சிங்கப்பூரில் கொரோனா நோய்த்தொற்றுக்கு மேலும் ஒருவர் பலி .

செப்டம்பர் 17ஆம் தேதி சிங்கப்பூரில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆடவர் (சிங்கப்பூரர்) ஒருவர் உயிரிழந்துள்ளார் அவருக்கு வயது 90 ஆகும்

செப்டம்பர் 17ஆம் தேதி கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளுடன் அவர் சிங்கப்பூர் தேசிய தொற்றுநோய் மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த 90 வயது அந்த ஆடவர் கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் அவருக்கு இருதயக் கோளாறு மற்றும் புற்றுநோய் தொடர்பான உடல்நலக்குறைவு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் சிங்கப்பூரில் இதுவரை 60 நபர்கள் நோய்த்தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

122 Serangoon Road UniverCell Mobiles Sunday Mega Offee