சிங்கப்பூரில் கிருமித்தொற்று குழுமமாக மாறியுள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி .

சிங்கப்பூரில் சமீப காலங்களில் கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 900 மேற்பட்டவர்கள் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 103 நபர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் இருப்பவர்கள் ஆவார்கள் .

சிங்கப்பூரின் ப்ளூ ஸ்டார் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் 46 பேருக்கு கிருமித்தொற்று தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது .

சுகாதார அமைச்சகம் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது 13 நோய்த்தொற்று குழுமங்களை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.