சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் 63 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

சிங்கப்பூரில் சமூக அளவில் 534 பேருருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் 63 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் சிங்கப்பூருக்கு வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 10 பேருக்கும் கிருமித்தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது .

மொத்தம் நேற்றைய நிலவரப்படி சிங்கப்பூரில் 607 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

சமீப காலங்களில் சிங்கப்பூரில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் இதே நிலைமை நீடித்தால் வரும் வாரங்களில் மேலும் நோய்தொற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது சிங்கப்பூர் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.