சிங்கப்பூரில் தங்குமிட ஊழியர்களுக்கான நடமாட்ட கட்டுப்பாடுகளில் தளர்வு வெளிநாட்டு ஊழியர்கள் வரவேற்பு.

சிங்கப்பூரில்  தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான நடமாட்ட கட்டுப்பாடுகளில் தற்போது தளர்வு அளிக்கப்பட்டுள்ளன இதனை வெளிநாட்டு ஊழியர்கள் வரவேற்றுள்ளனர் .

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் முதற்கட்டமாக அதிகளவிலான தடுப்பு செலுத்திக்கொண்ட விடுதிகளில் உள்ள ஊழியர்களுக்கு சோதனை முறையில் 500 பேர் வரை லிட்டில் இந்தியா பகுதிக்கு சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .

இதுபற்றி வெளிநாட்டு ஊழியர்கள் தெரிவிக்கையில் கடந்த ஒன்றரை வருடமாக வெளியில் எங்கும் செல்ல முடியாமல் தங்களின் பொழுதுகளை தாங்கள் தங்கும் இடங்களிலேயே கழித்ததாகவும் இது மிகப்பெரிய அளவில் மனச்சோர்வை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல வெளிநாட்டு ஊழியர்கள் தெரிவிக்கையில் லிட்டில் இந்தியா என்பது எங்களின் நண்பர்களை சந்தித்து உணவு உண்பது ஆலயங்களுக்கு செல்வது என்பது கடந்த ஒன்றரை வருடமாக மிகவும் சிரமமாக இருந்தது தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர் .