சிங்கப்பூர் வருவதற்கு அனுமதி கிடைத்தும் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வர முடியாத சூழ்நிலையில் பல ஊழியர்கள் இருந்து வருகின்றனர் !

சமீபத்தில் சிங்கப்பூர் அரசு சில நாடுகளுக்கு எல்லை கட்டுப்பாடுகளில் தளர்வு வழங்கியது அதன்படி தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் சிங்கப்பூர் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் இருந்து பல்வேறு வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வருவதற்கு தயாராகினர் .

தற்போது சிங்கப்பூரில் கிருமித்தொற்று அதிகரித்து வருவதால் மிக அதிக அளவிலான கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் விதித்துள்ளது. இதன் மூலம் தற்போது இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வருவதற்கு முன் அனுமதி கடிதம் வைத்திருந்தும் சிங்கப்பூர் செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது .

தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு அதிக அளவிலான விமானங்கள் இயக்கப்படும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

மேலும் நோய் தொற்று அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கான அதிகரிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது .