லிட்டில் இந்தியாவில் வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் செல்லும் வர்த்தக நிறுவனங்கள்- வெளிநாட்டு ஊழியர்களுக்காக காத்திருக்கின்றன .

சிங்கப்பூரின் முக்கிய வர்த்தக பகுதியாக கருதப்படும் லிட்டில் இந்தியாவில் உள்ள சில முக்கிய வர்த்தக நிறுவனங்களுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் செல்கின்றனர். வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் உள்ளவர்களுக்கு தற்போது சிங்கப்பூர் அரசு தளர்வுகளை அளித்துள்ளது. அதன்படி வெளிநாட்டு ஊழியர்கள் லிட்டில் இந்தியா சென்று வர அனுமதி அளிக்கப்படுகிறது .

முஸ்தபா சென்டர் :தங்களின் சொந்த ஊருக்குச் செல்லும் வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் முஸ்தபா சென்டர் என்ற இந்த வர்த்தக மையத்திற்கு செல்லாமல் ஊருக்கு செல்ல மாட்டார்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு வர்த்தக மையமாக விளங்குகிறது முஸ்தபா சென்றார்.

Mustafa Centre

வீரமாகாளியம்மன் ஆலயம் :வெளிநாட்டு ஊழியர்கள் ஆலயங்களுக்கு அதிகம் செல்லும் வழக்கம் கொண்டவர்கள் அதிலும் லிட்டில் இந்தியா பகுதியில் அமைந்துள்ள இந்த வீரமாகாளியம்மன் ஆலயத்திற்கு வாரத்திற்கு ஒரு முறையாவது சென்று வருவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

Veeramakaliyamman Temple

குடை கேன்டீன் :அனைத்து வகையான உணவு தேவை மற்றும் குளிர் பானங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு இடமாக விளங்கி வருகிறது குடை  கேன்டீன் தங்களது நண்பர்களை சந்தித்து கொண்டு உணவு மற்றும் பானங்களை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர் வெளிநாட்டு ஊழியர்கள் .

செல்போன் கடைகள் :லிட்டில் இந்தியாவில் அதிக அளவிலான செல்போன் கடைகள் இருக்கின்றன வெளிநாட்டு ஊழியர்கள் ஊருக்கு செல்லும்போது தங்கள் குடும்பத்தினருக்கு அன்பாக வாங்கிச் செல்லும் செல்போன்களை வாங்குவதற்காக இந்த பகுதிகளுக்கு அதிகம் வருகின்றனர் குறிப்பாக வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் செல்லும் செல்போன் கடையாக விளங்குகிறது வீரமாகாளி அம்மன் ஆலயத்திற்கு எதிர்புறம் அமைந்துள்ள யுனிவர்சல் மொபைல்ஸ்.

Univercell Mobiles

இப்படி வாரத்திற்கு ஒருமுறை சென்று வந்து லிட்டில் இந்தியாவின் வர்த்தகத்தை பெருக்கி தங்களுக்கான மனச்சோர்வை போக்கிய லிட்டில் இந்தியா மீண்டும் வெளிநாட்டு ஊழியர்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது .