சிங்கப்பூரில் கிருமித் தொற்றால் மேலும் ஒருவர் பலி.

சிங்கப்பூரில் சமீபகாலங்களில் கிருமித்தொற்று அதிகரித்து வந்த நிலையில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவர் மேலும் உயிரிழந்துள்ளார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த 80 வயதான அந்த ஆடவர் ஒரு முறை தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு இணை நோய்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக  உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் இதய பிரச்சினைகள் இருந்ததாக கூறப்படுகிறது .

சிங்கப்பூரில் இதுவரை 58 நபர்கள் நோய் தொற்றுக்கு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

நேற்று முன்தினம் அவர் சிங்கப்பூரில் உள்ள தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு நோய்க்கான அறிகுறிகள் நடப்பு மாதம் நான்காம் தேதி தென்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.