நோய்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளால் சிங்கப்பூரில் பேருந்துகளின் போக்குவரத்தில் தாமதம் ஏற்படலாம் .

சிங்கப்பூரில் நோய்த்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளால் சிங்கப்பூரில் பேருந்துக்காக காத்திருக்கும் நேரம் சற்று அதிகரிக்கலாம் என நிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் அதைச்சார்ந்த 4 போக்குவரத்து நிறுவனங்களும் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கின்றன .

கிருமித் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளால் சில பேருந்து ஓட்டுனர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கலாம் இதனால் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்க கூடிய நேரம் அதிகரிக்கலாம் என அது தெரிவித்தது மேலும் காத்திருப்புக் காண நேரம் 5நிமிடத்திற்குள் இருக்கலாமென தெரிவித்திருக்கிறது .

சாதாரணமாக பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தை விட தற்போது கூடுதலாக ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரத்திற்கு பேருந்திற்காக காத்திருக்கும் நிலை ஏற்படலாம்.

மேலும் சில சேவைகளுக்காக அதாவது பேருந்து சேவைகளுக்காக பத்து நிமிடத்திற்கு மேல் காத்திருக்க நேரிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் பயணிகள் பேருந்திற்காக காத்திருக்கும் நிலையை சமாளிக்கும் வகையில் இரண்டு அடுக்கு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சில பேருந்து நிலையங்களில் கண்டறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களை தொடர்ந்து அதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த செயல்படுத்தப்படுகிறது .