பசும்பொன் தேவர் திருக்கோவிலில் பிறந்தநாளை கொண்டாடிய தமிழ்நாடு முக்குலத்து புலிகள் கட்சி நிறுவனத்தலைவர் .

செப்-11தமிழ்நாடு முக்குலத்து புலிகள் கட்சியினுடைய மாநில நிறுவனத்தலைவர் திரு. ஆறு. சரவண தேவர் பிறந்த நாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் திருமகனார் திருக்கோவிலில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

முன்னதாக தமிழ்நாடு முக்குலத்து புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது இல்லத்திற்கு யாரும் வருகை தர வேண்டாம் என்றும் கொரோனா நோய்த்தொற்று சூழல் நிலவி வருவதால் தனது பிறந்தநாளை இந்த வருடம் விழாவாக கொண்டாட பட போவதில்லை என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரையும் தனது பிறந்த நாளில் நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார் .

இந்த பிறந்த நாள் நிகழ்வில் தமிழ்நாடு முக்குலத்து புலிகள் கட்சியினுடைய தஞ்சை, நாகை திருவாரூர், திருப்பூர் கொங்கு மண்டலம் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஒன்றிய நகர மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் திருக்கோவிலில் சுவாமிக்கு மாலை அணிவித்து பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் தமிழ்நாடு முக்குலத்து புலிகள் கட்சியின் மாநில நிறுவனத்தலைவர் திரு. ஆறு சரவண தேவர் .