வெளிநாட்டு ஊழியர்களின் வருகையால் மீண்டும் பொலிவு பெறும் லிட்டில் இந்தியா!

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் இருக்கக்கூடிய ஊழியர்களுக்கான கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன . சிங்கப்பூரின் முக்கிய வர்த்தக பகுதியாக கருதப்படும் லிட்டில் இந்தியா சென்று வருவதற்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .

லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள அனைத்து வர்த்தகமும் வெளிநாட்டு ஊழியர்களை நம்பி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது உணவகம் சில்லறை வர்த்தகம் மளிகை கடைகள் ஜவுளிக்கடைகள் என அனைத்துமே வெளிநாட்டு ஊழியர்களை நம்பி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவிலான வெளிநாட்டு ஊழியர்கள் லிட்டில் இந்தியா வருவது வழக்கம் அந்த பகுதியில் இருக்கக்கூடிய கோயில்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு நண்பர்களை சந்தித்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு நண்பர்களுடன் உணவருந்துவது வழக்கமாக கொண்டிருந்தனர் வெளிநாட்டு ஊழியர்கள். நோய்த்தொற்று காலம் என்பதால் அவர்களால் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக லிட்டில் இந்தியா பகுதிக்கு வந்து செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வந்தது .

தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் மூலம் வெளிநாட்டு ஊழியர்களின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறது லிட்டில் இந்தியா வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அங்கு இருக்கக்கூடிய அனைத்து வியாபார தளங்களும்.

கடந்த காலத்தைப் போல லிட்டில் இந்தியா மீண்டும் பொலிவு பெறும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் துளிர்த்துள்ளது.