முக்குலத்து புலிகள் கட்சியினருக்கு மாநில நிறுவனத் தலைவர் வேண்டுகோள்.

தமிழ்நாடு முக்குலத்து புலிகள் கட்சியின் மாநில நிறுவனத்தலைவர் திரு. ஆறு. சரவணதேவர் கட்சியினருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது

எதிர்வரும் 11.09.2021 அன்று எனது பிறந்தநாள் நிகழ்வை ஒட்டி, நான் பசும்பொன் தேவர் திருமகனாரின் நினைவிடத்துக்கு சென்று வணங்க திட்டமிட்டுள்ளேன். அன்றைய தினம் நான் ஊரில் இல்லாத காரணத்தால் உறவுகள் என்னை சந்திக்க வருவதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அன்றைய தினம் தங்கள் பகுதியில் உள்ள நலிவடைந்த மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். கொரோனா சூழலில் பிறந்தநாள் நிகழ்வை நடத்த என் மனம் விரும்பவில்லை. அடுத்த வருடம் வழக்கம் போல் விமர்சையாக நடத்த தேவர் திருமகனின் அருளாசி கிட்டட்டும். தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் உங்களது வாழ்த்துக்களை உரிமையோடு பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.