சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கைகளால் தைக்கப்பட்ட முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன !

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பு ஒன்று செய்தி ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. அதன்படி சில வெளிநாட்டு ஊழியர்களுக்கு தன்னார்வலர்களால் கைகளால் தைக்கப்பட்ட முகக் கவசங்கள் மற்றும் உணவுகள் இனிப்புகள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

Its Raining Rain Coats என்ற தன்னார்வ அமைப்பு வெளிநாட்டு ஊழியர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவும் அவர்களுக்கு மன ரீதியாக ஏற்படும் சோர்வை போக்குவதற்கான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தன் அமைப்பில் இருக்கக்கூடிய தன்னார்வலர்கள் மூலம் பல்வேறு பொருட்களை வழங்கி வருகிறது. குறிப்பாக உணவு அவர்களுக்கு தேவையான எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வழங்குவது முக கவசம் வழங்குவது என பல்வேறு பணிகளை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது .