சிங்கப்பூர் அங் மோ கியோ அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களுக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சமீப காலங்களில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் நோய்த்தொற்றை கட்டுக்குள் வைத்துள்ளது சிங்கப்பூர் அரசு.

சிங்கப்பூரில் அங் மோ கியோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது நபர்களுக்கு தற்போது நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது அந்த குடியிருப்பில் அவின்யூ4இல் உள்ள புளோக் 113 இல் அனைவருக்கும் Covid 19 நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

மேலும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த நோய்த்தொற்று எவ்வழியில் இருந்து ஏற்பட்டது என்பதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சமூகத்தில் கிருமித்தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காக அந்தப் பிளாக்கில் வசிக்கும் அனைவருக்கும் கட்டாய மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது .