மஞ்சள் காமாலையால் ஊர் திரும்பிய தமிழக ஊழியரின் உயிர் நடுவானில் பிரிந்தது -திருச்சி விமான நிலையத்தில் சோகம்

தமிழ்நாட்டின் நீர்பழனி கிராமத்தைச் சேர்ந்த திரு. வேல்முருகன் வேலைக்காக மலேசியா சென்றுள்ளார். அவர் அங்கு முடிதிருத்தும் தொழிலாளராக பணியாற்றி வந்துள்ளார் மூன்று ஆண்டு ஒப்பந்தம் முடிவடைந்த பிறகும் அவரை ஊருக்கு அனுப்பாமல் வேலை வாங்கியதாக கூறப்படுகிறது .

மேலும் தனக்கு மஞ்சகாமாலை நோய் ஏற்பட்ட பிறகும் அதற்கான சிகிச்சை பெறுவதற்கு பணவசதி இல்லாமல் சிரமப்பட்டு உள்ளார். மேலும் தமிழகத்தில் இருந்து அவரது உறவினர்கள் மலேசியாவிற்கு அனுப்பிய பணத்தில் விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வந்துகொண்ருந்தார். இந்த நிலையில் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்ட திரு. வேல்முருகன் விமானத்தில் வரும்போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் திரு. வேல்முருகன் அவர்களுக்கு திருமணம் ஆகி உள்ளது திருமணமாகிய சில வாரங்களில் அவர் தன்னுடைய வேலைக்காக மலேசியா சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

திருச்சி விமான நிலையத்தில் அவரது உடலை கண்ட அவரது உறவினர்கள் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.