பொதுமக்களின் பங்களிப்போடு உயிர் பெறும் பொது நூலகம்!

திருவாரூர் மாவட்டம்:திருத்துறைப்பூண்டி நகரத்தில் பொது நூலகம் கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு புத்தக வாசிப்பு மூலம் சேவையாற்றி வருவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு மாணவர்கள் அரசு அதிகாரிகளாக பணியாற்றிட காரணமான இந்நூலகம், தேனிக்குளம் பிள்ளையார் குளத்தெருவில் 01.06.1996 முதல் 2500 ச.அடியில் புதிய கட்டடத்தில் இயங்கி வருகிறது.போட்டித்தேர்வு நூல்கள், மருத்துவம், பயன்படுகலைகள்,நாவல்கள்,சிறுவர்கதைகள்,வரலாற்று நூல்கள் உட்பட 56852 நூல்கள் உள்ளன. குழந்தைகள் பிரிவு,பொது மக்களுக்கு இணையத்தள சேவையை மணிக்கு ரூபாய் 10/- க்கு வழங்கப்படுகிறது.விரைவில் போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடைபெற உள்ளது.

Thiruthuraipoondi Library Under Renovation

ரூபாய் 1000 /- செலுத்தி 76 பேர் நூலக புரவலர்களாகவும், ரூபாய் 30 செலுத்தி 6158 பேர் உறுப்பினர்களாகவும், ரூபாய் 110 செலுத்தி 28 பேர் குடும்ப உறுப்பினர்களாகவும் உள்ளனர்.மேலும் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் இயற்கை இடர்பாடுகளால் இந்நூலக கட்டடம் மிகவும் சிதிலமடைந்து உள்ளது.கடந்த காலங்களில் ஒரு நாளொன்றுக்கு 100 பேருக்கு மேல் வருகை தந்த நூலகம் தற்போது 30 பேருக்கு குறைவாக வாசகர்கள் வருகையை பதிவு செய்து வருகிறது. எதிர்காலத்தில் நமது தலைமுறைகள் திறன்பேசியால் தங்களது வாழ்வை தொலைக்காமல் புத்தக வாசிப்பால் சிறந்த வாழ்க்கையை அமைத்து கொள்ள நமது நகரத்திற்கு பொது நூலகம் அவசிய தேவை.

Library Front View

அப்பேர்பட்ட பொது நூலகம் இன்றைய தலைமுறையை கவரும் விதத்தில் அமைய வேண்டும்.தற்போது பொது மக்களின் பங்களிப்போடு கட்டட புனரைமப்பு பணி நடைப்பெற்று வருகிறது.கட்டட புனரமைப்பு செலவின் மதிப்பு ரூபாய் 3,50,000/-(தோராயமாக) கணக்கிட்டு பணிகள் நடைப்பெற்று வருகிறது.

தற்போது கட்டடம் பழுது பார்த்தல்,சிறுவர் பூங்கா,மாடி ஷெட் (போட்டித்தேர்வு மாணவர்களுக்கு பயிற்சிகூடம்), நூலக வாயிலில் இருந்து பூ கல் (பேவர் பிளாக்) அமைத்து இருபக்கமும் பெஞ்ச் அமைத்தல், போட்டித்தேர்வுக்கு புதிய நூல்கள் வாங்குதல், கட்டிடம் வர்ணம் பூசுதல் போன்ற வேலைகள் நடைபெற தற்போது பொருளுதவி வேண்டப்படுகிறது.

அறிவுத்திருக்கோயிலான இந்த நூலகம் புனரமைப்பு பணிக்கு நீங்களும் உதவலாம் .

தொடர்புக்கு நூலகர் திரு.ஆசைத்தம்பி +91 97152 80151