பா.ஜ.க மாநில துணை தலைவர் பிறந்தநாள் விழா- வீரவாள் பரிசு

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களின் பிறந்தநாள் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் 9-8-2021 நேற்று நடைபெற்றது.

பிற்பகல் 2 மணிக்கு துவங்கிய பிறந்தநாள் விழா மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரு. கருப்பு முருகானந்தம் அவர்களின் ஆதரவாளர்கள் கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Karuppu Muruganandham Birthday Celebrations

தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி மயிலாடுதுறை, மற்றும் பிற மாவட்டங்களிலிருந்தும் பாரதிய ஜனதா கட்சியினர் இந்த விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுகளையும் வழங்கினார்.

வீரவாள் பரிசு:பிறந்தநாள் விழாவில் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களுக்கு பல்வேறு விதமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது திருவாரூர் மாவட்ட தலைவர் திரு.கோட்டூர் ராகவன் மற்றும் மாவட்ட ஓ.பி.சி அணி செயலாளர் Ss.ராஜீவ்காந்தி அவர்களால் வழங்கப்பட்ட வீரவாள் .

Karuppu Muruganandham Birthday Celebrations

மேலும் திருவாரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. அறிவு ராம் ,மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் மாரிபிரபு , மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் ராஜபூபதி, மற்றும் திருத்துறைப்பூண்டி நகர தலைவர் பூக்கடை பாலாஜி, நகர துணைத் தலைவர் சாமி கார்த்திக், நகர துணைத் தலைவர் வசந்த் முருகேசன். மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டு திரு. கருப்பு முருகானந்தம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு அவருக்கு வீரவாள் ஒன்றையும் பரிசாக வழங்கினர் .

Karuppu Muruganandham Birthday Celebrations

மேலும் அனைத்து கட்சியைச் சார்ந்த திருவாரூர் மாவட்டம் மற்றும் டெல்டா பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மாவட்ட செயலாளர்கள். மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய மாநில நிர்வாகிகள் திரு.கருப்பு முருகானந்தம் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .