சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணமடைந்துள்ளார் .

ஆகஸ்ட் 4ஆம் தேதி மூச்சுத்திணறல் தொடர்பான சிகிச்சைக்காக 79 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் செங்காங் மருத்துவமனையை நாடியுள்ளார் .

சிகிச்சையின் போது அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது .மேலும் அவருக்கு இதய நோய் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது அதே நாளில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிங்கப்பூர்வாசியான அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை நோய் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது .

சிங்கப்பூரை பொறுத்தவரையில் நோய் பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சிங்கப்பூர் அரசின் அதிரடி நடவடிக்கைகளால் Covid 19 நோய் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.