சிங்கப்பூர் சொந்த ஊரை போன்ற உணர்வை தருகின்றது-தேசிய தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு ஊழியர்களின் பதிவுகள்.

சிங்கப்பூர் தேசிய தினத்தை கொண்டாட தயாராகிவருகிறது . இதனையொட்டி சிங்கப்பூரில் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் எங்கள் சொந்த ஊரை போன்ற உணர்வுகளைத் தருகிறது என்று தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் என்றால் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது சுகாதாரம் அது மட்டும் அல்லாமல் பல்வேறு கலாச்சாரங்களை ஒன்றிணைத்து நட்புறவோடு இருக்கும் நாடு சிங்கப்பூர் எனவும் தெரிவிக்கின்றனர் வெளிநாட்டு ஊழியர்கள்.

சிங்கப்பூர் தேசிய தினத்தன்று பல்வேறு வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் தங்களுக்கு நேர்ந்த இனிமையான தருணங்களையும் தங்கள் வாழ்வின் பொருளாதார உயர்வுக்கு அடித்தளமாக சிங்கப்பூர் இருந்தது எனவும் தங்களின் சமூக வலைதளங்களில் கருத்துக்களை கூறுகின்றனர் .

சொந்த ஊரை போன்ற உணர்வுகளை சிங்கப்பூர் தருவதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக எங்கள் ஊரின் பண்பாடு கலாச்சாரம் நட்புறவோடு இணைந்த லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள உணவகங்கள், ஆலயங்கள் வர்த்தக நிறுவனங்கள் ஒவ்வொருநாளும் எங்கள் ஊரை நினைவுபடுத்தும் எனவும் தெரிவிக்கிறார்கள்.

குறிப்பாக வெளிநாட்டு ஊழியர்கள் நலனில் சிங்கப்பூர் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதாகவும். சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூரைச் சேர்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்புகள் வெளிநாட்டு ஊழியர்கள் பாதுகாப்பு நலனை பேணி பாதுகாப்பதாகவும் வெளிநாட்டு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர் .