இந்திய சுதந்திர தினத்தை கொண்டாட சிங்கப்பூர் இந்திய தூதரகம் அழைப்பு.

வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தினம் இந்தியா மற்றும் இந்திய தூதரகங்கள் அமைந்திருக்கும் நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தின் சார்பில் 75வது இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சிகளை ZeeTv Asia Pacific தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது இந்த ஒளிபரப்பில் தேசப்பற்று நிகழ்ச்சிகள் மற்றும் இந்திய கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியவை சிங்கப்பூர் நேரப்படி 11 மணியளவில் ஒளிபரப்பப்படுகிறது.

மேலும் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு இந்திய ஜனாதிபதி உறையை வாசிப்பார் சிங்கப்பூருக்கான இந்திய தூதர் திரு. பெரியசாமி குமரன் அவர்கள் அந்த அனைத்து நிகழ்ச்சிகளும் சிங்கப்பூர் இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Zee Tv Asia Pacific மற்றும் சிங்கப்பூர் இந்திய தூதரகத்தின் முகநூல் பக்கம் மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் இந்தியாவின் சுதந்திர தினத்தை இணையம் வழியாக கண்டுகளிக்க அழைப்பு விடுத்துள்ளது சிங்கப்பூர் இந்திய தூதரகம் .