வெளிநாடு செல்பவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் போது கவனிக்க வேண்டியவை.

உலகளவில் நோய்த்தொற்று காரணமாக பல்வேறு நாடுகள் எல்லை கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் தமிழகம் குறிப்பாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணி நிமித்தமாக செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போது பல்வேறு சர்வதேச நாடுகள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை தங்கள் நாட்டிற்கு ஏற்பது பற்றிய பரிசீலனையில் உள்ளது .

குறிப்பாக இந்தியாவிலிருந்து செல்பவர்கள் தடுப்பூசி செலுத்தும் பொழுது கவனிக்க வேண்டியவை என்னென்ன.

பொதுவாக பல்வேறு நாடுகள் தடுப்பூசி அதாவது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை மட்டுமே தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கிறது .

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் போது அடையாள அட்டை ஆவணமாக உங்களின் பாஸ்போர்ட் கடவுச்சீட்டை தருவது சிறந்தது. தங்களின் அடையாள ஆவணமாக கடவுச்சீட்டு அதாவது பாஸ்போர்ட்டை தரும்போது உங்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு வழங்கப்படும் சான்றிதழ்களில் உங்களின் பாஸ்போர்ட் எண் இணைக்கப்பட்டிருக்கும்.

தாங்கள் தடுப்பூசி செலுத்தும்போது உங்களின் பெயர் பாஸ்போர்ட்டில் எப்படி உள்ளதோ அதே போல் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஸ்போர்ட்டில் உள்ளது போல உங்களின் பெயர் இருக்கிறதா அல்லது எழுத்துப்பிழை ஏதேனும் இருக்கிறதா என்பதை சரி பார்க்கவும்.

தடுப்பூசி செலுத்தும்போது தாங்கள் வழங்கும் தொலைபேசி எண் உங்களுடையதாக இருக்க வேண்டும். காரணம் தாங்கள் விமான நிலையத்திற்கு செல்லும் பொழுதோ அல்லது தடுப்பு ஊசி செலுத்திய பிறகு உங்களின் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் பெறுவதற்கும் அது உதவும் .

நீங்கள் இரண்டு தவணை தடுப்பு ஊசி செலுத்தி கொண்டபிறகு தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து வைத்துக் கொள்வது சிறந்தது .

இந்தியாவைப் பொறுத்தவரையில் வெளிநாடு செல்பவர்களுக்கு கோவிஷீல்டூ தடுப்பூசி வழங்கப்படுகிறது .

நீங்கள் தடுப்பூசி செலுத்திய பிறகு நீங்கள் பதிவு செய்யும் போது வழங்கிய தங்களின் தொலைபேசி எண்ணிற்கு தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்படும் .