சிங்கப்பூரில் வேலையில் சேர்வதற்காக போலி சான்றிதழ் வழங்கிய 2 இந்திய வெளிநாட்டு ஊழியருக்கு சிறைத்தண்டனை .

சிங்கப்பூரில் பணியில் அமர்வதற்கு போலி சான்றிதழ்களை சமர்பித்த 2 இந்திய வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .

சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகத்திடம் போலியான சான்றிதழ்களை வழங்கிய குற்றத்திற்காக பயில்வால் சுனில் மற்றும் சுற்றத்தார் விஜய் என்ற ஆடவர் இருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் .

மேலும் அவர்கள் இருவரும் சிங்கப்பூரில் நிரந்தரமாக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் அவர்களின் வேலை அனுமதி அட்டையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வட பகுதிகளில் செயல்பட்டு வரும் மாணவ் பாரதி பல்கலைக்கழகத்தின் மீது போலியான சான்றிதழ் வழங்கிய குற்றத்திற்காக இந்தியாவில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பல மாணவர்களுக்கு உண்மையான சான்றிதழ்களையும் சில மாணவர்களுக்கு பொய்யான சான்றிதழ்களையும் அந்த பல்கலைக்கழகம் வழங்கியதாக இந்தியாவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் அந்தப் பல்கலைக்கழகத்தின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது .