ஏர்டெல் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டிய பிரபல Youtuber மதன் கௌரி !

தமிழகத்தின் பிரபல யூடியூபர் ஆன மதன் கௌரி ஏர்டெல் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார். நேற்று தனது வலைதளத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றில் இதுகுறித்து அவர் பேசியுள்ளார் .

தான் தினமும் மாலை நேரங்களில் யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்வதாகவும் அப்படி பதிவேற்றம் செய்யும்போது சென்னையின் அருகில் உள்ள பகுதியில் நான் பதிவேற்றம் செய்யும் பொழுது சரியான அளவில் நெட்வொர்க் அதாவது wi-fi இணைய இணைப்பு கிடைக்கவில்லை என அதில் தெரிவித்திருக்கிறார்.

இதுபோன்று வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விதமாக சில நிறுவனங்கள் செய்து வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் ஏர்டெல் மட்டுமல்லாமல் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விதமாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். யூடியூபர் மதன் கௌரியின் இந்த பதிவிற்கு பல்வேறு தரப்பினர் அவருக்கு ஆதரவாக பின்னூட்டமிட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .