சிங்கப்பூரில் 660 வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடை .

சிங்கப்பூரில் பணியில் அமர்வதற்காக போலி சான்றிதழ்களை வழங்கிய தொடர்பில் 660 வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் அவர்களின் சான்றிதழ்கள் உண்மையானதாக என்பதை சரிபார்க்க வேண்டும் என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்கள் சமர்ப்பிக்கும் சான்றிதழ் தொடர்பான பல்கலைக்கழகங்கள் கல்வி நிறுவனங்கள் பற்றிய தரவுகளைத் சரி பார்ப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

சிங்கப்பூரில் மட்டும் போலி சான்றிதழ் வழங்கி பணியில் அமர்வதற்காக சான்றிதழ் வழங்கப்பட்ட தொடர்புகளில் ஆண்டுக்கு 8 பேர் குற்றம் சாட்டப் படுவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளிநாட்டு ஊழியர்கள் வழங்கும் சான்றிதழ்கள் மற்றும் அது தொடர்பான கல்வி நிலையங்கள் பல்கலைக்கழகங்கள் தொடர்பான தரவுகளை சரிபார்த்த பிறகே வேலை அனுமதி கடிதத்தை வழங்குகின்றன .

கடந்த ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூரில் பணியில் சேர்வதற்கு போலி சான்றிதழ் வழங்கிய தொடர்பில்ஆண்டிற்கு 660 வெளிநாட்டு ஊழியர்கள் பணியில் சேர்வதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.