சிங்கப்பூர் உறவுகளே நீங்கள் நினைத்தால் ஒரு வேளை உணவு இவர்களுக்கு வழங்கலாம்! !

சிங்கப்பூரில் இருக்கும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் வணக்கம். தமிழ்நாடு:தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜா மடத்தில் கடந்த 9 ஆண்டுகளாக இயங்கி வருகிறது ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகம் .

இந்த காப்பகத்தில் இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உங்களால் முடிந்த ஒருவேளை அல்லது ஒருநாள் உணவினை நீங்கள் வழங்கலாம் உங்கள் வீட்டு இல்ல சுபநிகழ்ச்சிகள் பிறந்தநாள் திருமண விழாக்கள் அனைத்தையும் உங்கள் குடும்பத்தினருடனும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோருடன் கொண்டாடலாம்.

மேலும் உங்களால் முடிந்த சிறு உதவி எவ்வளவு சிறிய உதவியாக இருந்தாலும் நீங்கள் செய்யலாம் அது பொருளாகவோ பணமாகவோ இருக்கலாம் நீங்கள் நேரில் சென்று காப்பகம் முழுவதையும் பார்வையிட்ட பிறகு கூட நீங்கள் அவர்களுக்கான உதவியை வழங்கலாம் .

அங்கு இருப்பவர்களுக்கு ஒரு நாள் உணவு ரூ.3500 காலை மதியம் இரவு என அவர்களுக்கு 3 வேளைக்கான உணவினையும் நீங்களும் வழங்கலாம்.

நீங்கள் செய்யும் சிறிய உதவி அவர்களுக்கு உண்ண உணவு இருக்க இருப்பிடம் வழங்கும். உங்களால் முடிந்த எவ்வளவு சிறிய உதவியாக இருந்தாலும் செய்யவும்

இந்த காப்பகம் சிறந்த முறையில் நடைபெறுகிறது என்பதை உறுதி செய்த பிறகே இந்த செய்தி எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது என்பதை அறியவும்.

Contact:Manivannan +919629972164
Contact:Manivannan +919629972164
Contact:Manivannan +919629972164