வெளிநாடு செல்ல முடியாததால் சிக்கலில் தவிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் .

தமிழ்நாடு ஜூலை -22 :சர்வதேச அளவில் வெளி நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் வெளிநாட்டு ஊழியர்கள் தற்போது வெளிநாடு செல்வதற்கான உரிய அனுமதி மற்றும் வேலை அனுமதி கடிதம் இருந்தும் எல்லை கட்டுப்பாடுகளால் வெளிநாடு செல்ல முடியாமல் பல சிக்கலில் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக பணியாளர்கள் வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பைப் பெறுகின்றனர் தற்போது நோய் பரவல் காரணமாக பல்வேறு நாடுகள் எல்லை கட்டுப்பாடுகளை விதித்துள்ளன .

குறிப்பாக வெளிநாடுகளுக்கு தனது குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காகவே வெளிநாட்டு ஊழியர்கள் பல்வேறு நாடுகளுக்கு வேலைகளுக்காக செல்கின்றனர். இப்படி வேலைக்கு செல்பவர்கள் முக்கால்வாசி ஊழியர்கள் கடன் பெற்று வெளிநாடுகளுக்கு செல்கின்றனர் பின்பு வெளிநாடு சென்ற பிறகு அங்கு தன்னுடைய வருமானத்தைக் கொண்டு தாங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

வழக்கமாக கடன் பெற்று ஓரிரு மாதங்களில் வெளிநாடு செல்வதற்கான அனுமதி கிடைத்த பின்பு வெளிநாடு செல்கின்றனர் ஆனால் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு வெளிநாடு செல்வதற்கான அனுமதி கடிதம் பெற்ற பிறகும் அந்தந்த நாடுகளின் எல்லைக் கட்டுப்பாடு காரணமாக தற்போது வரை வெளிநாடு செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது இதனால் மூன்று நான்கு மாதங்களுக்கு மேலாக கடன் சுமை அதிகரித்துள்ளது .

தன்னுடைய பொருளாதார நிலைமை உயர்த்துவதற்காக வெளிநாடு செல்ல கடன் பெறுபவர்கள் முக்கியமாக வங்கிகளில் கடன் பெறுவதில்லை தனிநபரிடம் மட்டுமே கடன்  பெறுகின்றனர் அதற்கான வட்டி விகிதமும் அதிகமாகவே இருக்கிறது. இதனால் தற்போது வெளிநாடு செல்ல முடியாத சூழ்நிலையில் வட்டி மற்றும் கடன் சுமை அதிகரித்ததால் மிகப்பெரிய சிக்கலில் சிக்கி உள்ளனர் வெளிநாட்டு ஊழியர்கள்.

இதுபோன்ற சிக்கலில் இருக்கும் வெளிநாடு செல்ல முடியாத ஊழியர்களுக்காகவும் இளைஞர்களுக்காகவும் மத்திய அரசின் சார்பில் பல்வேறு சிறு தொழில் கடன்கள் வழங்கப்படுகின்றன அதனைக் கொண்டு பல்வேறு வெளிநாட்டு ஊழியர்கள் சிறு தொழிலை தொடங்கி தற்போது முதலாளிகளாகவும் இருந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சர்வதேச அளவில் தற்போது கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களை பல்வேறு சர்வதேச நாடுகள் ஏற்றுக் கொள்கின்றனர் அதனால் வெளிநாடு செல்ல விரும்புவர்கள் உடனடியாக முதல் மற்றும் இரண்டாவது தவணையை செலுத்திக் கொண்டு வெளிநாடு செல்வதற்கு முயற்சிக்கலாம் என்கிறார் பயண ஏற்பாட்டாளர் ஒருவர்.