ஆறு நாட்களாக தீப்பற்றி எரிந்த சிங்கப்பூர் சரக்கு கப்பல்.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று இலங்கை அருகே 6 நாட்களாக தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

எக்ஸ்பிரஸ் பெர்ல் என்ற அந்தக் கப்பல் மே 25ஆம் தேதி தீ விபத்துக்குள்ளானது. 1486 கொள்கலன்கள் அடங்கிய அந்தக் கப்பலில் வேதிப்பொருட்கள் நைட்ரிக் அமிலம் மற்றும் வாசனை திரவியங்களை ஏற்றிக்கொண்டு இந்தியா வந்தது அந்த கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது .

இலங்கை கொழும்பு துறைமுகத்தை நெருங்கிக்கொண்டு இருந்த பொழுது அந்த கப்பலில் இருந்த வேதிப்பொருட்களால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது அந்த கப்பல்.

இந்தியக் கடற்படை மற்றும் இலங்கை கடற்படை வீரர்ககளால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் அமிலங்கள் கடலில் கலக்காமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கப்பலின் ஒரு பகுதி மூழ்கிய நிலையில் காணப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .

தமிழ் திரை உலகில் நீங்களும் பாடகராக ஓர் அரிய வாய்ப்பு இன்றே டவுன்லோட் செய்யுங்கள் #VAYYUP App சுந்தர்.சி யின் திரைப்படத்தில் பாடகராகும் வாய்ப்பை பெறுங்கள் .