100% கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் கிராமம்! இலக்கை நோக்கி விரையும் கருப்பம்புலம் ஊராட்சி !!

உலகம் முழுவதும் Covid-19நோய் பரவலை கட்டுப்படுத்த பேராயுதமாக கருதப்படும் தடுப்பூசியினை தன் நாட்டு மக்களுக்கு செலுத்தி வருகிறது உலக நாடுகள் . இந்தியாவும் அதற்கேற்ப உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் தமிழக அரசின் சார்பிலும் மத்திய அரசின் சார்பிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கருப்பம்புலம் ஊராட்சியில் தமிழகத்திலேயே முதல் முறையாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊராட்சியாக கருப்பம்புலம் ஊராட்சியை மாற்றுவதே தனது லட்சியம் என தெரிவிக்கிறார் கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் திரு. இரா.சுப்புராமன். இந்த மகத்தான பணிக்கு ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள் சிறப்பான முயற்சியும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

R.SubbuRaman (President Karuppampulam)

தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கென்று தனி குழு அமைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வுகள் அளிக்கப்படுகிறது. மேலும் வீடு வீடாக சென்று ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் துண்டுப்பிரசுரங்கள் அளிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்கப்படுத்தப் படுகிறார்கள்.

Announcement Notice

தடுப்பூசி தொடர்பான சந்தேகங்கள் மேலும் தடுப்பூசி தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசியின் பயன்கள் பற்றியும் அது தொடர்பான சந்தேகங்களையும் வதந்திகளையும் தீர்த்து வைக்கின்றனர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் .

கருப்பம்புலம் ஊராட்சியில் உள்ள பொதுமக்களும் அதிகளவில் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருவதாக ஊராட்சி மன்றத்தலைவர் மேலும் தெரிவித்திருக்கிறார். தடுப்பு ஊசி செலுத்தப்படும் இடம் அதற்கான தேதி ஆகியவை துண்டு பிரசுரங்கள் மூலம் வினியோகிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தெரிவிக்கப் படுகிறது என மேலும் அவர் தெரிவித்தார் .

தமிழகத்திலேயே முதன் முறையாக 100% கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட கிராமமாக விரைவில் தமிழக அளவில் பெருமை பெற இருக்கிறது கருப்பம்புலம் ஊராட்சி என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.