சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்தளிக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு மருத்துவ பொருட்கள் வாங்கப்பட்டது. குறிப்பாக அதில்  1400 மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர் களும் வாங்கப்பட்டன. வாங்கப்பட்ட மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இன்று மாவட்டங்களுக்கு பிரித்தளிக்கப்பட்டது .

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் சிங்கப்பூரில் இருந்து பெறப்பட்ட மருத்துவ உபகரணங்களை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணியினைத் துவக்கி வைத்தார்.

தமிழக அரசு சார்பில் மேலும் சிங்கப்பூரில் இருந்து பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வாங்கப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சிங்கப்பூர் தூதர் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து மருத்துவ உபகரணங்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ ஆக்ஸிஜன் தொடர்ந்து கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான பொருட்களை பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பிரித்து அனுப்பப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.