தனது சொந்த ஊருக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிய சிங்கப்பூர் தொழிலதிபர் SPR.சுதன்

இந்தியா முழுவதும் தற்போது நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த நிலையில் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் நோய் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகின்றன.

நகர்ப்புறங்களை காட்டிலும் தற்போது நோய்த்தொற்று பரவலின் வீரியமானது கிராமப்புறங்களிலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தனது சொந்த கிராமமான பிச்சன்கோட்டகம் கிராமத்திற்கு மருத்துவ உதவிப் பொருட்களை வழங்கியிருக்கிறார் சிங்கப்பூர் தொழிலதிபர் யுனிவர்சல் மொபைல்ஸ் நிறுவனர் Spr.சுதன்

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான மருத்துவ சிகிச்சையின் மூலம் மீண்டுவரலாம். மேலும் சிகிச்சையின் போது நெஞ்சில் அதிகப்படியான சளி அல்லது மூக்கில் அதிகப்படியான சளி ஏற்பட்டு விட்டால் அதிலிருந்து உடனே விடுபடுவதற்கு ஆவிபிடித்தல் சிறந்த மருத்துவ முறை என தெரிவிக்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன்கோட்டகம் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தனது சொந்த செலவில் ஆவி பிடிப்பதற்கான உபகரணங்களை வழங்கியுள்ளார் சிங்கப்பூர் தொழிலதிபர் திரு .Spr.சுதன் .

பிச்சன் கோட்டகம் வடபாதியில் உள்ள ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று இந்த உபகரணங்களை பயனாளிகளின் கையில் வழங்கினார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த திரு.Sp.மதன் (எ) தங்க கணபதி.

இயற்கை பேரிடர் காலங்களில் இக்கிராமத்திற்கு உதவியுள்ளார் திரு. Spr.சுதன். கடந்த கஜா புயலில் இந்த கிராமத்திலேயே அவர் தங்கி தனது ஊர் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களையும் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .