இந்தியாவிற்கு 3.2 மில்லியனுக்கு அதிகமாக உதவிகளை வாரி வழங்கிய சிங்கப்பூர் -நன்றி தெரிவித்த இந்தியர்கள்

Covid-19 நோய் தொற்றுக்கு எதிராக போராடி வரும் இந்தியாவிற்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் 3.2 மில்லியனுக்கு அதிகமான மருத்துவ உதவிப் பொருட்களை வழங்கி உள்ளது .

இந்தியாவிற்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றை தேவைப்படும் இந்திய மாநிலங்களுக்கு பிரித்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்னும் பல மருத்துவ உதவிப் பொருட்களை இந்தியாவிற்க்கு அனுப்ப சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது. சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் இந்தியாவிற்கு உதவுவதற்காக சிறப்பு நன்கொடை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .