தமிழ்நாட்டிற்கு 300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய சிங்கப்பூர் தூதரகம் -தமிழக முதல்வரிடம் வழங்கினார் சிங்கப்பூர் தூதர் .

இந்தியா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன இதற்கு மத்திய அரசும் மாநிலங்களுக்கு உதவி வருகிறது.

இதனிடையே சிங்கப்பூரில் இருந்து பல்வேறு உதவிப் பொருட்கள் இந்தியாவிற்கு வந்த வண்ணம் உள்ளன இதனை மத்திய அரசு முறையாக பிரித்து தேவைப்படும் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது.

இன்று மே 10ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் திரு. மு .க .ஸ்டாலின் அவர்களை சந்தித்து 300 ஆக்சிஜன் செறிவூட்டிகளை (Oxygen Concentrators)வழங்கினார் இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் திரு.பாங் காக் டியன் அவர்கள்.

Tamilnadu Secretariats Chennai

இந்த நிகழ்வில் முதன்மை செயலர் திரு .ஜான்சியோ, சிங்கப்பூர் தூதரகத்தின் துணை தூதர் திரு.ஆபிரகாம் டான்,மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. கே. என். நேரு ,மருத்துவர் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர் .