மலேசியாவில் நாடு தழுவிய லாக்டோன் அறிவிப்பு -மே 12 முதல் ஜூன் 7 வரை

மலேசியாவில் Covid-19 நோய்த்தொற்று அதிகரித்து வரும் இந்த வேளையில் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு நாடுதழுவிய ஊரடங்கு அறிவித்திருக்கிறது மலேசிய அரசு.

நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் -19 தொற்றுகளை தடுக்க மலேசியா புதன்கிழமை (மே 12) தொடங்கி அடுத்த மாத தொடக்கம் ஜூன் 7வரை நாடு தழுவிய இயக்கக் கட்டுப்பாட்டு ஆணையை (MCO) விதிக்கும் என்று பிரதமர் முஹைதீன் யாசின் திங்களன்று தெரிவித்தார்.

நோய்த்தொற்று பரவிய நாள் முதல் தற்போது விதிக்கப்படும் இந்த ஊரடங்கு கட்டுப்பாடானது மூன்றாவது மிக முக்கிய கட்டுப்பாடாக கருதப்படுகிறது.

நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் தொடரும் என்று திரு. முஹைதீன் கூறினார், ஆனால் அனைத்து சமூக நடவடிக்கைகள், நிகழ்வுகள், உணவகங்களில் உணவு உட்கொள்வது மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய உத்தரவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிப்புற நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன, இது ஜூன் 7 வரை நீடிக்கும் என்று திரு முஹைதீன் கூறினார்.