சிங்கப்பூரின் உதவிக்கரம் மேலும் 3 ஆக்சிஜன் கன்டைனர் களுடன் இன்று இந்தியா புறப்பட்டது விமானம்.

மே-10:சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் சிங்கப்பூர் இந்திய தூதரகமும் இணைந்து இந்தியாவிற்கு ஆக்சிஜன் கண்டைனர்களை ஏற்றுமதி செய்து வருகின்றன.

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு பல்வேறு மருத்துவ உதவிப் பொருட்கள் சென்றடைந்துள்ளன. இந்த நிலையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் இன்று மூன்று ஆக்சிஜன் கண்டைனர்களை ஏற்றிக்கொண்டு இந்தியா சென்றுள்ளது

இந்தியாவிற்கு செல்லும் இந்த மூன்று ஆக்சிஜன் கண்டைனர்களையும் வழங்குகிறது அதானி குழுமம் என்பது குறிப்பிடதக்கது.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் சிங்கப்பூர் தொமாசேக் அறக்கட்டளை மற்றும் லிசா அமைப்பின் மூலம் இந்தியாவிற்கு Covid-19 நிவாரண நிதி திரட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது .