தமிழ்நாட்டில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு என்று தனி துறை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தினுடைய முதல்வராக மு.க ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் பதவி ஏற்றுக்கொண்டார் அப்போது தனது அமைச்சரவையில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு என்று தனி துறை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் துறை என்று அழைக்கப்பட்ட அந்த துறையானது தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள தமிழர்களின் நலனை கண்காணிப்பதற்கும் அவர்களுக்கு தேவையான அலுவல் ரீதியான பணிகளை செய்வதற்கு இந்த துறை செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .