சிங்கப்பூரில் 10 புதிய கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சிங்கப்பூர் – மே 9]

நண்பகல் 12 மணி நிலவரப்படி, சிங்கப்பூரில் 10 புதிய கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக சுகாதார அமைச்சு அதன் முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் சமூகத்தில் இருப்பவர்கள் என்றும், குடிபெயர்ந்த ஊழியர் தங்கும் விடுதிகளில் சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும், புதிதாகக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு, வெளிநாட்டிலிருந்து வந்த 18 பேருக்கு, சிங்கப்பூர் வந்தவுடன், வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அல்லது அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மொத்தத்தில், இன்று 28 புதிய கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் சிங்கப்பூரில் பதிவாகி உள்ளன.

சுகாதார அமைச்சு, இன்றிரவு வெளியிடவிருக்கும் செய்தி அறிக்கையில், மேல் விவரங்களைத் தெரிவிக்கும்.

http://go.gov.sg/moh090521update

➡️ தொடர்புகளின் தடங்களைக் கண்டறிவதற்கு உதவ, கட்டாயமாக்கப்படவுள்ள, TraceTogether வழி மட்டுமே செய்யப்படும் SafeEntry பதிவுமுறை, ஜூன் 1க்கு பதிலாக மே 17 அன்று அமல்படுத்தப்படும்.